துப்பாக்கினா தோட்டா தெறிக்கனும்.! வைரலாகும் அஜித்தின் மாஸ் வீடியோ.!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் போனி கபூர்.

மேலும் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் நடிகை யார், வில்லன் யார் என்ற தகவல் வெளியாகமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு, இந்த நிலையில் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு  பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு பேட்டியில் கூறினார்.

அந்த வகையில் பைக் ரேஸ் காட்சி எடுக்கப்பட்ட பொழுது அஜித்திற்கு சிறிது காயம் ஏற்பட்டது, ஆனால் அந்த காயத்துடன் அஜித் அந்த காட்சியை முடித்து விட்டு தான் சென்றார் என தெரியவந்தது.

தல அஜித் நடிப்பதை தாண்டி புகைப்பட கலைஞராகவும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் குருவாகவும், பல பணிகளை செய்துள்ளார், இந்த நிலையில் அஜித் துப்பாக்கி சுடுவதை ஹாபியாக வைத்துள்ளார், இதில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது தல அஜித் துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment