இந்திய அளவில் தனது திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய அஜித்.! எப்பொழுதும் தல தல-தான்

தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம்,நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கி போனிகபூர் தயாரித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் படக்காட்சி முடிய உள்ளதாக  இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தல அஜித் பொதுவாகவே பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் துப்பாக்கி சுடும் போட்டி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற நாற்பதாம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் கலந்து கொண்டுள்ளார். அதில் சிறந்த முறையில் விளையாடி துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மெடல் வென்றுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தல அஜித்தின் ரசிகர்கள் இந்த வீடியோ காணொளி இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த விடியோகாணொளி.

https://twitter.com/TeamThalaFC/status/1368521503751344133?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1368521503751344133%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F190918

Leave a Comment