வலிமை அப்டேட்டுக்காக சாமி இடமும் அதே கேள்வியைக் கேட்கும் தல அஜித் ரசிகர்கள்.! இதற்கு மேல் படக்குழு சும்மா இருந்தால் அவ்வளவுதான்.

0

கடந்த சில வருடங்களாக தல அஜித் ரசிகர்கள் கேட்கும் ஒரே விஷயம் என்றால் அது வலிமை படத்தின் அப்டேட் தான் தல அஜித்தின் நடிப்பில் மிக அட்டகாசமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிக்கொண்டே போகிறது தல அஜித்தின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் பலரும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என்ன தான் வலிமை படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடுவோம் என கூறி வந்தாலும் பலரும் படக்குழு மீது நம்பிக்கை இல்லாமல் முதலமைச்சரிடம் ஆரம்பித்து கிரிக்கெட் வீரர்கள் வரை வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தார்கள் ஆனால் அஜித் ரசிகர்கள் பலரும் மனம் நொந்து போய் விட்டார்கள்.

என்றுதான் கூறவேண்டும் வலிமை படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே வலிமை படத்தின் அப்டேட்களை வெளியிடுங்கள் என கேட்டு வந்தார்கள் அதற்கு ஏற்றது போல் படக்குழுவும் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக செய்த ஒரு நிகழ்வு பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம் அதாவது தல அஜித் ரசிகர்கள் பலரும் சாமி ஆடும் நபர் ஒருவரிடம் ஐயா வலிமைப்படத்தின் அப்டேட் சொல்லுங்கள் என கேட்டு உள்ளார்களாம்.

ajith87
ajith87

மேலும் இந்த தகவலை அறிந்த பல சினிமா பிரபலங்களும் வலிமை படத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக சாமியை கூட விட்டு வைக்க மாட்டீங்களா என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஆனால் ரசிகர்களோ எங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் வெளிவந்தால் தான் நாங்கள் சந்தோசமாக இருப்போம் அதுவரை நாங்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே இருப்போம் என கூறுகிறார்கள்.