வழிகாட்டியவரையே மறந்த அஜித்!! எஸ்.பி.பிக்காக இதக் கூட செய்யல?

0

thala ajith didnt say condolence to spb:உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி நேற்று காலமானார் எஸ்பிபி. அவரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் இறப்பிற்கு இந்த உலகமே அழுதது என்றால் அது மிகையாகாது. தனது பாட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்தார்.

இவரின் பாடலுக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தனர். இவரின் குழந்தை தனமான பேச்சு, சிரிப்பு, நடிப்பு மற்றவரை மதிக்கும்பண்பு, என அனைத்துமே இவரை பார்ப்பவர்களை இழுக்கும்.

இவரின் இறப்பிற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள்,  சினிமா பிரபலங்கள், பாடகர்கள்,  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் என அனைவருமே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வண்ணம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்பிபி. இவரால் தான் அஜித்திற்கு தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதுமட்டுமல்லாமல் எஸ் பி பி அவர்களின் மகன் சரணும் அஜித்தும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். அஜித் விளம்பரங்களில் நடிக்கும் பொழுது சரணின் உடையை தான் அணிந்து கொள்வாராம்.

இப்படி இருக்கும் நிலையில் அஜித் நேரடியாக வரமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை என பலர் வருத்தத்தில் உள்ளனர். இப்படியும் ஒரு மனிதனா எனவும் கூறுகின்றனர். உதவி  செய்தவருக்கு  அஞ்சலி கூட செலுத்த முடியாத அளவுக்கு என்ன என பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.