லாக் டவுனில் அஜித் செய்த முக்கியமான வேலை இதுதானாம்!! தலான்ன தல தான்.

0

thala ajith work in lockdown:தல அஜித் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அவ்வளவு எளிமையான மனிதர். எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளி உலகத்தில் உலா வருபவர். அவரை இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்த்திருக்கவே முடியாது.

அவர் தன் வேலை உண்டு தான் உண்டு என இருப்பார் எப்போதும் அவர் பாசிட்டிவான நபர்களையே அவருடன் வைத்திருப்பார். இவர் அனைவரிடத்திலும் அன்புடன் இருப்பார், யாருக்கு என்ன வேணும், என்ன செய்யணும் என உணர்ந்து செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த இந்த லாக்டவுன் காலத்தில் படப்பிடிப்பு இல்லாததால் பலர் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்து லாக்க்டவுன் முடிந்து படப்பிடிப்பை தொடங்கலாம் என கூறியதும் வலிமை பட சூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என அஜித் படக்குழுவிடம் கூறியுள்ளார்.

இதனை அறிந்த தல ரசிகர்கள் அஜித் எப்போதும் மற்றவர்களின் நிலைமைய உணர்ந்து அதற்கேற்றாற் போல் செயல்படுவார் என அவரை பாராட்டி வருகின்றனர். இந்த கொரனாவுக்கு மருந்து தெளிக்க டரன் பயன்படுத்தலாம் எனவும் அவர் தான் கூறினார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் அஜித் தனது வீட்டின் பின்னாடி உள்ள தோட்டத்தில் 75 விதமான பூச்செடிகளை நட்டு உள்ளாராம். இந்தப் பூந்தோட்டத்திற்க்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவரே செய்து வந்தாராம்.

அது மட்டுமல்லாமல் அவரது மூலிகைத் தோட்டத்திலும் சில நேரம் கவனம் செலுத்தி வருவாராம். தல அஜித் அவரது ரசிகர்களுக்கு ஒரு முன்னோடியாகவே இருக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.