பொது மேடையில் நடன இயக்குனர்களுடன் நடனம் ஆடும் தல அஜித்..! ரசிகர்களுடன் ரசிகராக பார்த்து ரசிக்கும் ஷாலினி..!

தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் தான் அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது சமீபத்தில் வெளியாக ரசிகர்களை மிகுந்த வரவேற்ப்பை உருவாக்கி உள்ளது.

மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் இந்த போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொதுவாக தல அஜித் அவர்கள் கடந்த பல வருடங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார் ஆனால் இதற்கு முன்பாக அவர் சில பொது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.

சில முன்னணி நடன இயக்குனர்களுக்காக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித் அவர்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் மேடையில் அவர்களுடன் நடனமாடி அசத்தியுள்ளார்.  மேலும் அவர் நடனம் ஆடிய அந்த நிகழ்ச்சியில் அவருடைய மனைவி ஷாலினியும் வந்துள்ளார்.

மேலும் அஜித் நடனம் ஆடும் பொழுது அவற்றை சேரில் அமர்ந்தபடி பார்த்து ரசித்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment