தல அஜித் இப்படி தான்.! முதன்முறையாக தல அஜித்தை பற்றி வாயை திறந்த வினோத்.!ஒரு வார்த்தையா இருந்தாலும் திருவாசகம் தான்

0

தல அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிக முக்கிய நடிகர் ஆவார், இந்த நிலையில் வசூல்  மன்னனாகவும் தல அஜித் வலம் வருகிறார், இந்த நிலையில் தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக  ஹச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இயக்குனர் வினோத் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைப்பதில் வல்லவர்.

அதனால் வலிமை திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, ஏனென்றால் வினோத் இதற்கு முன் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய திரைப்படங்களை பார்த்து தல அஜித் உடனடியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார், அஜித் வினோத்தை நம்பியது போல் அந்த திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது உடனே அடுத்ததாக மீண்டும் அடுத்த பட வாய்ப்பை வினோத்திற்கு கொடுத்துள்ளார் அஜித்.

இந்த நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் அடுத்து படப்பிடிப்பை எப்போது நடத்தலாம் என படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் வலிமை திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் ஹெச் வினோத் முதல்முறையாக அஜீத் பற்றி கூறியுள்ளார், இவர் இதற்கு முன் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அஜித் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் பற்றி வினோத் கூறியதாவது தன்னை சுற்றி உள்ளவர்களிடம் எப்போதும் நேர்மையான எண்ணங்களே வைத்துக் கொள்வார் எனவும் ரசிகர்களையும்  குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியும் மிகவும் அக்கறை கொண்டவர் எனவும் கூறியுள்ளார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் தல தல தான் என புகழ்ந்து வருகிறார்கள்.