அந்த விஷயத்தில் அஜித் மற்றும் விஜயகாந்த் ஒரே மாதிரி தான்! புகழும் பிரபல நடிகை..

0

thala ajith and vijayakanth both are same said by leading actress: தல அஜித் திரைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு மட்டுமல்லாமல் அஜித்திற்க்கு தற்போது வலிமை திரைப்பட சூட்டிங் போய் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஓடும் படமாக இருக்கும் என கூறுகின்றனர்.

அஜித்தை ஒருபுறம் ரசிகர்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கே தெரியும் அஜித் மிகவும் எளிமையான மனிதர் என்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் என்றும் இவருக்கு கிடைத்த சில முன் அனுபவங்கள் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

நடிகர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார். அதுபோலவே தல அஜித்தும் தன்னை சார்ந்தவர்களை அக்கறையுடன் பார்த்து கொள்வார்.

அது மட்டும்மல்லாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற  அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் என சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஜோதிகா அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்துவிட்டு அவருக்கு பூங்கொத்து அனுப்பி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஜோதிகா அஜித்துடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளது நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.