கடற்கரையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அஜித்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

0

தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை, இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.,

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார், ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தல 60 திரைப்படம் போலீஸ் கதையாக உருவாக இருக்கிறது.

இந்த நிலையில் அஜீத் சமீபத்தில் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்ற பொழுது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்லாகின. அந்த புகைப்படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் இருந்தார்.

இந்த கெட்டப் தான் தல60க்காண கெட்டப் இருக்கலாம் என அனைவரும் கூறுகிறார்கள், இந்தநிலையில் சென்னையில் திருவான்மியூரில் உள்ள கடற்கரையில் அஜித் மற்றும் ஷாலினி மற்றும் மகனுடன் கடற்கரையில் நீண்ட நேரம் செலவிட்டுள்ளார் அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.