அஜித்திடம் பிரமாண்ட கதையைச் சொல்லப் போகும் பிரபல இயக்குனர் எதிர்பார்ப்பை எகிற வைத்த தல 61.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார், கடந்த வருடத்தில் அஜித்தின் திரைப்படம் நேற்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது, இந்த நிலையில் தற்போது அஜித், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் அஜித், படத்தில் பைக் ரேஸ் காட்சிகளை முடித்து விட்டு தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து வருகிறது, ஆனால் தற்போது கோரோனோ வைரஸ் பாதிப்பால் பல இடங்களில் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் அடுத்த திரைப்படத்தில் எந்த இயக்குனருடன் இனைய போகிறார் என்றும் என்ன கதையாக இருக்கும் என்றும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது, அந்தவகையில் சூர்யாவை வைத்து சூழ்நிலை பற்றி படத்தை இயக்கிய சுதா கொங்கரா, தளபதி விஜய்க்கு ஒரு கதையை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் விஜய்யோ ஏ ஆர் முருகதாஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார் என ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

இந்தநிலையில் சுதா கொங்கரா அஜித்திற்கு ஒரு கதையை உருவாக்கியுள்ளார். அதை விரைவில் அஜித்திடம் கூற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது, இந்த கதை மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா தமிழ் சினிமாவிற்கு தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார், அவருக்கு தல அஜித் வாய்ப்புக் கொடுப்பாரா என்பது ரசிகர்களின்  மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Comment