விஜய்க்காக எழுதிய கதையை அஜித்திடம் கூறி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்.! அப்போ தல 61 மரண மாஸ் தான்

0

thala ajith 61 movie: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே இயக்குனரின் படத்தில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் நடிகைகள் தற்போது அதிலிருந்து மாறி வேற வேற இயக்குனருடன் நடித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் அட்லீ திரைப்படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதுபோல அஜீத் சிறுத்தை சிவா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் தற்போது இவர்கள் இருவரும் மாறி உள்ளனர். அப்படி மாறி வரவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை, அதை நடிப்பு மூலம் வெளிப்படுத்தும் விதம் என அனைத்தும் வித்தியாசமாக உள்ளதால் படங்கள் நன்றாக  ஓடுகிறது.

அந்தவகையில் நடிகர் அஜித் இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதையை கேட்டுள்ளார். இவர் விஜய்க்கு எழுதிய கதையை தற்போது அஜித்துக்கு கூறியுள்ளார். அஜித்தும் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம். தல அஜித்திற்கு அவர் கூறிய கதையில் சில திருத்தங்கள் தேவைப்பட்டதாம்.

இயக்குனர் மறுக்காமல் ஏற்றுக் அதை ஏற்றுக் கொண்டதால் அஜித் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரியப்படுகிறது. இவர் தற்போது நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணைந்து தல அஜித் 61 ஆவது திரைப்படம் தொடங்க உள்ளதாக தெரியவருகிறது.

தல அஜித்தின் இந்த புதிய கூட்டணியை அவரது ரசிகர்கள் ஏற்பார்களா இல்லையா என்று அவர்கள் பதிவிடும் கருத்தில் தான் தெரியவரும் என கோலிவுட் வட்டாரம் கூறிவருகிறது.