தல அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தல 60 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது, படத்திற்கு வலிமை என பெயர் வைத்துள்ளார்கள்.
வினோத் இயக்கத்தில் தல அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், மேலும் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார், படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தைத் தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார், மேலும் தல60 திரைப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் தல60 திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது இந்த நிலையில் படத்தின் டைட்டில் உடன் பூஜை புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
