வலிமை அப்டேட் வருவதற்குள் பிரபல இயக்குனரை தல 61 கதையை எழுத சொல்லி கட்டளை இட்ட தல அஜித்.! மாஸ் தகவல் இதோ..

தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.  அதுமட்டுமில்லாமல் படத்தை போனிகபூர் அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறும் எனவும் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் அஜீத் தற்போது தன்னுடைய 61வது திரைப்படத்திற்கு கதை எழுத கூறி பிரபல இயக்குனர் வினோத் அவர்களிடம் கட்டளையிட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பி விட்டது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய 61வது திரைப்படத்தையும் வினோதன் இயக்க வேண்டும் எனவும் போனிகபூர் தயாரிக்க வேண்டும் எனவும் பேசியதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தல அஜித் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது அதுமட்டுமில்லாமல் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதனால் மே 1ஆம் தேதியை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தல 61 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ajith-thala
ajith-thala

Leave a Comment