தல 61 இயக்குனர் யார் தெரியுமா.! இவர்களில் யாரேனும் ஒருவர்தான் உறுதியாக கூறும் கோடம்பாக்கம்.?

தல அஜித் அவர்கள் நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து தற்போது ஹச். வினோத்துடன்  இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை போனிகபூர் அவர்கள் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் இரண்டு கட்டங்கள் முடிவடைந்து விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் மக்களின் ஆதரவோடு தொடங்கப்படும் என தல அஜித் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு படக்குழுவினரும் ஓகே  சொல்லி உள்ளனர்.

வலிமை படத்திற்கு அடுத்ததாக வேற எந்த இயக்குனருடன் இணைவார் என அஜித் ரசிகர்கள் மற்றும் மக்கள் சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டு வருகின்றனர் அப்போது தல அஜித் அவர்கள் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி மற்றும் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் இயக்குனருடன் கதையைக் கேட்டு உள்ளாராம்.

இவர்களில் ஏதாவது ஒரு இயக்குனரை செலக்ட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தாலும் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தமிழ் சினிமாவில் தல அஜித்தை வைத்து இயக்க  பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.ஏ ஆர் முருகதாஸ், வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன், புஷ்பா காயத்ரி, லோகேஷ் கனகராஜ் போன்ற பல இயக்குனர்கள் களத்தில் குதித்துள்ளார் ஆனால் அஜித் அவர்களோ வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார்.

ajith
ajith

இந்த நிலையில் விஷ்ணுவர்தன் மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் கதையை கேட்டு உள்ளாராம். கதை ரொம்பவே பிடித்துப் போய் உள்ளதால் இவர்களில் யாரையாவது ஒருவரை செலக்ட் செய்வார் என தெரியவருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை ரத்தினம் தயாரிக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

Leave a Comment