தல 61 மீண்டும் மெகா ஹிட் திரைப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் அஜித்.

0

தல அஜித் சமீபத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்ததால் தாய்மார்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்திருந்தார், மீண்டும் அஜித்தை வைத்து இந்த டீம் தல60 திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது, படத்தை வினோத் தன் இயக்க இருக்கிறார். தல 60 படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கும்  இந்த நிலையில் தல 61 படத்தின் அப்டேட் வர தொடங்கிவிட்டது.

அது என்னவென்றால் தல 61 திரைப்படத்தில் அஜித் மீண்டும் ரீமேக் படத்தில்தான் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படம் ‘ஆர்டிகல் 15’ என்ற ஹிந்தி ரீமேக் திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் தான் வைத்துள்ளார்.

ஹிந்தியில் இந்த திரைப்படத்தை பார்த்த அஜித் குமார் இந்த திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாகவும் இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் தானே நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அஜித் தரப்பினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

‘ஆர்டிகள் 15’ திரைப்படம் சாதியை மையமாக வைத்து உருவாகிய திரைப்படம் அதனால் அஜித் நடிப்பது கடினம் என்று சிலர் கூறினாலும், சமீபகாலமாக அஜித் பெண்களுக்கான புரட்சி திரைப்படங்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே அதனால் இந்த திரைப் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.