இணையதளத்தை அதிரவைக்கும் தல 60 டைட்டில் இதுவா.? தெரிக்கவிடும் ரசிகர்கள்

0

தல அஜித் தமிழ் சினிமாவின் முடிசூடா வசூல் மன்னனாக திகழ்கிறார், இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி மெகா ஹிட்டானது, அதிலும் விஸ்வாசம் திரைப்படம் மக்களிடம் மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில் மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு புதிய கதை. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது அதுமட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் கூறுகிறார்கள்.

படத்திற்கு டைட்டில் இன்னும் வைக்கவில்லை தற்காலிகமாக தல60 என வைத்துள்ளார்கள், ஆனால் இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘வலிமை’ என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த டைட்டில் இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் வீரம், வேதாளம், விவேகம், விசஸ்வாசம் என வி சென்டிமென்ட்டை மீண்டும் அஜித் பின்பற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது எப்படியோ படக்குழு டைட்டிலை அறிவித்தால் தான் உண்மை தெரியும், அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஃபேன் இந்தியத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்கள், அதனால் ஏதாவது ஆங்கில வார்த்தை அல்லது ஹீரோயின் பெயரை தான் படத்தின் டைட்டிலாக வைப்பார்கள் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.