தல-60 படத்திற்கு இவர்தான் வில்லனா.? அப்போ படம் செம மாஸா இருக்குமே.!

0
ajith
ajith

தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்தநிலையில் அஜித் அடுத்ததாக தல60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தையும் வினோதன் இயக்குகிறார் போனிகபூர் தான் தயாரிக்கிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்றும், இந்த திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது, இந்த நிலையில் படத்தின் வில்லன் நடிகர் யார் என்ற தகவல் தற்போது வந்துள்ளது.

அதாவது படத்தில் வில்லனாக பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை படக்குழு உறுதி செய்யும் வரை நாம் காத்திருப்போம்.

ajaydevgn
ajaydevgn