தல-60 வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.! அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.!

0
valimai news
valimai news

H வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவிருக்கும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித், இவரை ரசிகர்கள் அனைவரும் தல என்று தான் கூப்பிடுவார்கள், இந்த நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் என்ற திரைப்படம் வெளியாகி அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, மேலும் சமீபத்தில் வெளியாகிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் கூட்டணியில் மீண்டும் அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்தத் திரைப்படத்தையும் வினோத் தான் இயக்கயிருக்கிறார், மேலும் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றயிருக்கிறார்  ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் நிரவ் ஷா, இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க இருக்கிறது ரிலீஸ் எப்போது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

வருகின்ற டிசம்பர் மாதம் வலிமை திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, மேலும் படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.