தல60 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? டைட்டிலே செம மாஸா இருக்கே.!

0

தல அஜித் நடிக்கவிருக்கும் தல60 திரைப்படத்தின் டைட்டில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தல அஜித் நடித்து வெளியாகிய  நேர்கொண்டபார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அதே டீமுடுன் மீண்டும் தல அஜித் தல 60 திரைப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது அதன் புகைப்படம் மற்றும் அஜீத்தின் புதிய கெட்டப் அனைத்தும் வெளியாகி வைரல் ஆனது, இந்த  படத்தில் அஜித் முழுக்க முழுக்க இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்த அணிகா  மீண்டும் அஜித்துடன் நடிக்க இருக்கிறார் இதை அவரே தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார், மீண்டும் மகளாக தான் நடிக்க இருக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்தின் முழு கற்பனையில் உருவாகியுள்ள இந்த கதை முழுக்க முழுக்க மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, தல60 திரைப்படத்திற்கு ‘பயம் அறியாதவன்’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டைட்டிலை பார்த்த ரசிகர்கள் செம மாஸாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.