தல 60 படபிடிப்பு பற்றி பரவும் தகவல்.! சூட்டிங் அப்டேட்

0

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது ஏனென்றால் இந்த திரைப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அஜீத் மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார், இந்தத் திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார், தல 60 திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வைரலானது அதுமட்டுமில்லாமல், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என பல புகைப்படங்கள் வெளியானது.

மேலும் தல60 சூட்டிங் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது படம் வருகின்ற டிசம்பர் மாதம்தான் துவங்க இருக்கிறது என படக்குழு முடிவெடுத்துள்ளது.