மீண்டும் தல60 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இந்த நடிகையா.? ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில்

0
ak60

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை அடுத்து நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு மக்களிடமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது, மேலும் நேர்கொண்ட பார்வை திரைப் படத்தை வினோத் தன் இயக்கியிருந்தார் போனிகபூர் படத்தைத் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் வினோத் இயக்கத்தில் தல60 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமாக இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்  தல 60 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார் மேலும் சில பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் திரைப்படத்திலும் விஜயுடன் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார், அதனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சனை இருக்கிறது, ஆனாலும் தல60 திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அஜித்துடன் ஜோடியாக யார் நடிப்பார் என்ற தகவல் தெரிய வரும், மேலும் அஜித் நயன்தாரா இதற்கு முன் விசுவாசம் ஏகன் பில்லா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது,.