தல 60 திரைப்படத்தின் அதிகாரபூர்வ மாஸ் அறிவிப்பை அசால்டாக வெளியிட்ட தயாரிப்பாளர்.!

0

தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை பின்ங் படத்தின் ரீமேக் ஆகும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை போனி கபூரின் பே வியூவ் ப்ராஜெக்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளார்கள்.

நேர்கொண்ட பார்வை திரைப் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை வருகின்ற எட்டாம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், படத்தை ரிலீஸ் செய்ய உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் போனி கபூர்.

மேலும் தல அஜித்தின் அடுத்த திரைப்படம் யார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் போனி கபூர், தல 60 நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்க இருக்கிறார் அதேபோல் போனி கபூர் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் போனி கபூர்.