தல 60 – அஜித்திற்கு மகளாக நடிக்கும் பிரபல நடிகை இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.! போடு தகிட தகிட

0

தமிழ்சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தல அஜித், இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஜித்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது ஏனென்றால் வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது.

விஸ்வாசம் திரைப்படம் அப்பா மகள் பாசத்தை வைத்து எடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படமும் ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்தது.

மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகிய வைரல் ஆனது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த அணிகா மீண்டும் தல60 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.