சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் வினோத். இவர் அஜித்தை வைத்து முதன்முதலாக நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் வினோத், இந்த திரைப்படத்திற்கு தல 60 எனதற்காலிகமாக பெயரிட்டுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தையும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். அஜித் இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்றும் படத்தில் இரண்டு மூன்று காட்சிகள் பைக் ரேஸ் இருக்கும் எனவும் தகவல் வெளியாகின.
வினோத் கொடுத்த முழுக்கதையும் படித்து பார்த்தால் அஜித் நேர்கொண்ட பார்வை விஸ்வாசம் ஆகிய படங்கள் பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்ததால் தனது அடுத்த படத்திலும் பேமிலி செண்டிமெண்ட் மற்றும் ஏமோஷனல் காட்சி சேர்க்குமாறு வினோத்திடம் கூறியுள்ளார், அதற்காக தீவிர பணியில் வினோத் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, விரைவில் தல 60 திரைப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் படக்குழு.
