தல60 படத்திற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்த அஜித்.! இதோ ஜிம் வொர்க் அவுட் புகைப்படங்கள்

0
ajith 60
ajith 60

தல அஜித் சமீப காலமாக ஒரே இயக்குனர் திரைப்படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார், இவர் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்கு திரைப்படங்கள் நடித்துக் கொடுத்தார் இதனை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகை இருக்கிறார். வினோத் இயக்கத்தில் முதன் முதலில் நடித்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தல 60 திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் எனவும் தெரிகிறது, மேலும் தந்தை மகள் பாச போராட்டம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் சண்டைக் காட்சிகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகளாக இருக்கும் நோக்கத்தில் இயக்குனர் வினோத் தல அஜித்திடம் கட்டுமஸ்தான உடல் தோற்றம் இருந்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார்.

உடனே அஜித்தும் சரி என ஒப்புக் கொண்டார் அஜித் தான் சொன்னதைச் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே, அதனால் அஜித் உடற்பயிற்சி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதனால் ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார், விவேகம் திரைப்படத்தில் அஜித் கட்டுமஸ்தான உடலமைப்பை பெற்ற இருந்தார் அதன் பிறகு  காயம் ஏற்பட்டதால் உடற் பயிற்சியை தொடர முடியவில்லை.

ஆனால் தற்பொழுது ஜிம்மில்  அதிக உடற்பயிற்சி செய்து வருவதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith-gym
ajith-gym
ajith-gym
ajith-gym