தல அஜித்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், ஏனென்றால் இவர் தன்னடக்கம் அதிகம் கொண்டவர், அதேபோல் தன்னம்பிக்கையும் கொண்டவர், இவரை பிடிக்காதவர் யாரும் இல்லை. அதேபோல் தனது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை அறிந்து அவர்கள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவார்.
பல நல்ல விஷயங்களை அஜித் செய்துவருகிறார் ஆனால் இவர் செய்வது யாருக்கும் தெரியாது தான் செய்வதை சொல்லி காட்டவும் விரும்பமாட்டார், அந்த காலத்தில் கூறுவார்களே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்ற பழமொழியை கடைபிடிப்பவர். இந்தநிலையில் அஜித் விசுவாசம் நேர்கொண்டபார்வை என்ற இரண்டு மெகா ஹிட் திரைப்படத்தை இந்த வருடத்தில் கொடுத்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கதை அமைந்திருந்தது.
தல60 திரைப்படத்தையும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார், இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத், தல அஜித் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ஒரு தனியார் ஹோட்டலுக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார் அந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
Latest Video Of #ThalaAjith & #Shalini Mam ??#Thala60 #Viswasam pic.twitter.com/iYXjsagZeV
— Dheena Shankar (@Dheena_shankar) September 21, 2019