தல60 பெயரில் மிகப்பெரிய மோசடி.! தயாரிப்பு தரப்பில் இருந்து எடுத்த அதிரடி நடவடிக்கை

0

தல அஜித் வினோத் இயக்கத்தில் கடைசியாக நடித்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 60 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார், மேலும் அஜித் தல 60 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகின. ஆனால் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இந்த திரைப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது அதேபோல், தல அஜித் இளமையுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தல60 திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெறுவதாக கூறி சிலர் மோசடி செய்து வருகிறார்கள்.

இந்த விஷயம் தயாரிப்பு தரப்பிற்கு தெரியவந்துள்ளது, சமூக வலைத்தளத்தில் போலியான மெசேஜ் எல்லாம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதைப்பற்றி போனிகபூர் தற்பொழுது சட்டப்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள நோட்டீஸ்…

thala 60
thala 60