அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் அடுத்ததாக ஹேட்ச் வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்தத் திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஃப்ரெஷ் ஸ்டோரி என அறிவித்திருந்தார்கள், இந்த நிலையில் அஜித் படத்திற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார்.
தல அஜித் ரசிகர்கலுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் அவருடன் சமீபத்தில் சில ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.
