என்னடா இது அட்லீக்கு வந்த சோதனை – முடிந்த படத்தை திரும்ப எடுக்க சொல்லும் பிரபலம்.?

இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனர் அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தினார். ராஜா ராணி இந்த படத்தை முதலில் இயக்கி வெற்றி பெற்றார்.

அதன்பிறகு தளபதி விஜயுடன் கைகோர்த்து இவர் இயக்கிய மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்கள் அடங்கும். இயக்குனர் அட்லீ தோல்வியை கொடுக்காத இயக்குனர்கள் லிஸ்டில் இன்றுவரை இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக  ரஜினி விஜய்யை வைத்து  படங்களை இயக்கிய அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது ரூட்டை இந்திப் பக்கம் மாற்றினார். இப்பொழுது ஷாருக்கான் நயன்தாரா ஆகியோர்களை வைத்து  லயன் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க இராணுவத்தை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் தான் தற்போது இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் அட்லீ டாப் நடிகர் ஷாருக்கானுக்கு படத்தை போட்டு காண்பித்துள்ளார் படத்தில் சில சீன்கள் சரியாக இல்லை எனக் கூற அதை திரும்ப எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தாராம்.

sharuk khan
sharuk khan

படமே கிட்டத்தட்ட முடியும் தருவாயில் ரீடேக் எடுக்க சொல்றாங்க.. இயக்குனர் அட்லீ தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம். இயக்குனர் அட்லீ ஹிந்தி பக்கம் போன உடனேயே வச்சி செய்வதால் அடுத்த படத்தை  அவர் தமிழ் சினிமா பக்கமே இயக்க வருவார் என கூறப்படுகிறது.

Leave a Comment