டெஸ்ட் போட்டியின் தரவரிசை டாப் 10 பட்டியலை வெளியிட்ட ஐசிசி.! முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா

0

டெஸ்ட் போட்டியின் பேட்ஸ்மன் தரவரிசைப் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது இதில் முதலிடத்தில் விராட் கோலி தான் இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தர வரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது, இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி 922 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அதேபோல் இரண்டாவது இடத்தில் 913 புள்ளிகள் பெற்று வில்லியம்சன் இருக்கிறார்.

அதேபோல் 881 புள்ளிகள் பெற்று புஜாரா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மேலும் முதல் 10 வீரர்களின் தரவரிசை பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விராட் கோஹ்லி (இந்தியா) – 922 புள்ளிகள், கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 913 புள்ளிகள், புஜாரா (இந்தியா) – 881 புள்ளிகள், ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 857 புள்ளிகள், ஹென்றி நிக்கோலஸ் (நியூசிலாந்து) – 778 புள்ளிகள், ஜோ ரூட் (இங்கிலாந்து) – 763 புள்ளிகள், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 756 புள்ளிகள்,
ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) – 719 புள்ளிகள், குவிண்டான் டி காக் (தென் ஆப்பிரிக்கா) – 718 புள்ளிகள், பாப் டூ பிளிசிஸ் (தென் ஆப்பிரிக்கா) – 702 புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.