உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா.

0
When-romance-results-come-together-it-is
When-romance-results-come-together-it-is

ஐசிசி இந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிவித்துள்ளது, இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஒன்பது அணிகளும் அடங்கும். இந்த டெஸ்ட் தொடரை கால்பந்து லீக் ஸ்டைலில் வடிவமைத்துள்ளார்கள். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.

கடைசி போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தில் ஜூலை 2021ல் மோதுவார்கள், இந்த போட்டியில் 27 தொடர்கள் 71 போட்டிகளும் அடங்கும்.

இப்பொழுது புள்ளி விவரங்களை காணலாம். வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி மோதி இரண்டு போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் 120 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் நியூசிலாந்து, இலங்கை அணி தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 2 வெற்றி ஒரு போட்டியில் ட்ரா மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது ஆக மொத்தம் 56 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு டிரா 2 தோல்வியுடன் 32 புள்ளிகள் பெற்ற ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் புள்ளி பட்டியல் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற 60 புள்ளிகளும் டைக்கு 30 புள்ளிகள், ட்ராவுக்கு 20 புள்ளிகள் என பிரித்து உள்ளார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எனில் வெற்றிக்கு 40 புள்ளிகள், டை-க்கு 20 புள்ளிகள், டிராவுக்கு 13 புள்ளிகளும் வழங்கப்படும். நான்கு போட்டிகள் கொண்ட தொடராக இருப்பின் வெற்றிக்கு 30 புள்ளிகள், டை-க்கு 15 புள்ளிகள், டிராவுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக இருக்கும் பட்சத்தில் வெற்றிக்கு 24 புள்ளிகள், டை-க்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 8 புள்ளிகளும் வழங்கப்படும்.