நீங்க எல்லாம் பேட்ஸ்மேன்னு சொல்லிக்கிட்டு வெளியே சுற்றாதீங்க பிரபல சீனியர் கிரிக்கெட் வீரரை வெளுத்து வாங்கும் ஹர்பஜன் சிங்.! யாருப்பா அது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிய போராட்டங்கள் எதுவும் இல்லாமல் தோல்வியை தழுவியது, மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வெறும் 90 ரன்களிலேயே  6 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமாக திணறியது.

முதல் போட்டியில் விளையாடிய ரகானே நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை பார்த்து பேட்டிங் செய்ய தெரியாத போல் திணறினார், அதுமட்டுமில்லாமல் ஜேமிஷன் மற்றும் வாக்னர் ஆகியோர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அங்கும் இங்கும் ஓடி ஓடி ஒளிந்து ஏதோ பூச்சாண்டி காட்டினார்கள்.

இவர்களின் பந்துகளில் இரண்டு முறை ஹெல்மெட்டில் அடி வாங்கிய ரகானே தாக்கு பிடிக்க முடியாமல் 9 ரன்களில் ஆட்டம் இழுந்து வெளியே சென்றார், இந்த ஆட்டத்தை பார்க்கும் பொழுது ஏதோ பந்துவீச்சாளர் பேட்டிங் செய்வது போல் இருந்தது என ஹர்பஜன்சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஹர்பஜன் சிங் கூறியதாவது அஜின்கியா ரஹானே டெய்ல் என்டர் போல் விளையாடினார். அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை மறந்துவிட்டார் போல் தெரிகிறது என்றும் ரகானே மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றும் விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

Leave a Comment