கண்களில் இருந்து கண்ணீர் தானாக வெளிவரும் அளவிற்கு வெளிவந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கோவில் சிலையை பாடல் வெளியீடு.!

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வலம் வருபவர்களில் ஒருவர்தான் நடிகர்  விஜய் ஆண்டனி இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இவர் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாக அந்த திரைப்படங்கள் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அதிலும் குறிப்பாக இவர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது இந்தத் திரைப்படத்தில் வரும் அனைத்து வசனங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இதில் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார் சமீபத்தில் இப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சி இணையத்தில் வைரலானது.

அதனைத்தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள  கோவில் சிலையை பாடல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த பாடலில் அண்ணன் தங்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டுகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த பாட்டை பார்த்துவிட்டு அழுகை வராமல் தடுக்க முடியல எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த படம் வெளியாகிவிட்டால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு தருவார்கள் என்பது மட்டும் தெரிகிறது.குறிப்பாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment