மௌனராகம் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை? அதிர்ச்சியில் சின்னதுரை.

0

seral actress died; சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மௌன ராகம் சீரியலில் நடித்துவரும் ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹைதராபாத்தில் மதுரா நகரில் வசித்து வருகிறார். இவர் இறந்த செய்தியை போலீசுக்கு தெரிவித்ததும் போலீசார் உடலை எடுத்து சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ஸ்ரவாணியின் சகோதரர் கூறியது என்னவென்றால் டிக் டாக் ஆப் மூலம் அறிமுகமான தேவராஜ் ரெட்டி என்பவர் தனது  சகோதரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஸ்ரவாணி சகோதரர் கூறியுள்ளார்.

மேலும் அவர் சகோதரர் போலீசிடம் கூறுகையில் புதன்கிழமை அவருக்கு சூட்டிங் இருப்பதாக சொல்லி குளிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் 15 நிமிடம் ஆகியும் வெளியே வரவில்லை. அவருக்கு சந்தேகம் வர தனது சகோதரியின் தோழியை அழைத்து கூறியுள்ளார்.

அவரது தோழியும் பாத்ரூமுக்குள் சென்று பார்த்து இறந்துவட்டார் என கூறியுள்ளார். விசாரணையில் மேலும் தெரிய வந்தது என்னவென்றால் தேவராஜ் ரெட்டி என்பவர் ஸ்ரவாணியின் தவறான புகைப்படங்களை காட்டி அவரிடம்  மிரட்டி 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பணம் வாங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் யுவராணியை அவர் மிரட்டியுள்ளார். அதில் பயந்த அவர் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார் என கூறுகின்றனர்.