தெலுங்கில் மாஸ் காட்டிய பிகில். எத்தனை திரையரங்கில் அலப்பறை தெரியுமா

0
Bigil-Poster
Bigil-Poster

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள், தமிழ்நாட்டை தவிர்த்து கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் விஜய்க்கு இருக்கிறார்கள். இவரின் திரைப்படம் வந்தாலே திரையரங்கம் திருவிழா போல் கூட்டம் இருக்கும்.

இந்நிலையில் விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் மற்ற பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகை விஜய் மெர்சல் படத்தின் மூலம் தனக்கான புதிய மார்க்கெட்டை தெலுங்கில் உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து சர்கார் படமும் தெலுங்கில் நல்ல வரவேற்பை  பெற்று வசூலிலும் பெற்றது, அந்த வகையில் தற்போது விஜய்யின் பிகில் திரைப்படம் 400 திரையரங்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ரிலீசாக இருக்கிறது.

பிகில் படத்தின் தெலுங்கு உரிமையை பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் எம் கோனார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, நடிகர் விஜய்க்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது, அதேபோல் இந்த படத்தின் கதை தெலுங்கு ஆடியன்ஸுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும், அதனால் பெரும் விலைக்கு விற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 400 திரையரங்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம்,

அதனால் தயாரிப்பாளர் மற்றும் தளபதி விஜய்க்கு மிகவும் நன்றி கூறுகிறேன் இந்த தீபாவளி நம்முடையது என உற்சாகமாக கூறியுள்ளார், இதனை பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.