தெலுங்கு நடிகர் ராம்சரண் குவித்து வைத்து இருக்கும் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவு கோடியா.?100, 200 கோடியெல்லாம் இல்ல அதுக்கும் மேல..

சமீபகாலமாக திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சொத்து குவித்து வைத்து உள்ளனர் என்பது குறித்து நாம் அண்மைக்காலமாக பார்த்து வருகிறோம். இப்பொழுது கூட தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் ராம் சரண்.

இதுவரை எவ்வளவு சொத்து குவித்துள்ளார் என்பது குறித்து நாம் பார்க்க இருக்கிறோம்.  தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.  அதிலும் குறிப்பாக மகதீரா, நாயக் போன்ற பல்வேறு படங்கள் இவருக்கும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இதுவரை இருந்து வந்துள்ளன.

இப்பொழுது கூட டாப் இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வருகிறார் அந்த வகையில் ராம்சரண் கையில் மூன்று படங்கள் இருக்கின்றன முதலாவதாக தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வரும் ராஜமௌலி உடன் கைகோர்த்து  RRR என்ற திரைப்படத்தை வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இவரது பெயரில் ஆச்சாரியா, Rc 15 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன முதலாவதாக RRR திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ராம்சரண் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் நடிகர் ராம்சரண் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது இவரை அவர் சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு சுமார்  1338 கோடிகள் என தெரியவந்துள்ளது சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவ்வளவு பணம் என்பதே மிகப்பெரிய ஒரு விஷயம் என ஒரு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment