சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்த மஹா திரைப்படத்தின் டீஸர்!! வைரலாகும் வீடியோ.

0

தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களை வேண்டாம் என்று கூறி தற்போது தொடர்ந்து எந்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தவறவிடாமல் நடித்து சினிமாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் சிம்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்து பெரும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இத்திரைப்படத்தினை தொடர்ந்து சிம்பு மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் இணையதளத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பதனாலும், வாலு திரைப்படத்திற்கு பிறகு தனது பழைய காதலிவுடன் சிம்பு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு அறிமுகமாகும் போது சிறப்பு தோற்றத்தில் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் இயக்குனர் அதன் பிறகு இவரின் கேரக்டரை விரிவுபடுத்தினார் என்று கூறப்படுகிறது. அதோடு இத்திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரில்லர் காட்சிகள் கூடிய திரைப்படமாகும்.

அதோடு படக்குழுவினர்கள் ஹன்சிகா மற்றும் சிம்புவின் ரொமான்ஸ் மற்றும் சிம்புவின் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை இத்திரைப்படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.  அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த டீசரில் எனக்கு வர பிரச்சினைக்கு காரணம் நான் உண்மையாக இருக்கிறது தான் என்பது அவரின் நிஜ வாழ்க்கையில் நடந்ததை அப்படியே பிரதிபலிக்கின்றது.