செம்பருத்தி சீரியல் வில்லி நடிகை பரதா நாயுடுவின் கண்ணீர் வீடியோ.

0

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகவும் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியளால் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி இன்று மற்ற சேனல்கள் உடன் போட்டி போட்டு முன்னிலையில் உள்ளது.

இந்த சீரியலில் நடிக்கும் கார்த்தி மற்றும் ஷபானா இருவருக்கும் எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவில் வில்லியாக நடிக்கும் மித்ரா விற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இவர் இதற்குமுன் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான தேன்மிட்டாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து அட்ரா மச்சான் விசிலு என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான நிரஞ்சனா படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் இவர் இதுபோன்ற சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு  பிரபலம் ஆகவில்லை. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு.

இவர் நடித்து வரும் செம்பருத்தி சீரியலின் ஒளிப்பதிவாளரான அன்பு என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தியை அறிந்த இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கேமராமேன் அன்புவிற்க்கு இரங்கலை தெரிவித்து இருந்தார். மேலும் அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் தனக்கு இந்த சீரியலில் பல பிரச்சனைகள் வரும் போதெல்லாம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளார் என்று வருந்தி கூறியுள்ளார்.

View this post on Instagram

I really really miss u ????????

A post shared by bharatha_naidu (@actress_bharathanaidu_official) on