ஃபர்ஸ்ட் சிங்கிளை தொடர்ந்து அடுத்த அப்டேட்டை வெளியிட்ட மாவீரன் டீம்.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வீடியோ…

விஜய் டிவியில் அறிமுகமாகிய பின்னர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதனை தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தால் பல கோடி நஷ்டங்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் சரிதா மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது மாவீரன் படத்தில் இருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதாவது மாவீரன் படப்பிடிப்பில் மானிட்டரில் இடம் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்கி அதிகமாகி இருக்கிறது.

விரைவில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த வீடியோ..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment