டிரான்ஸ்ஃபரில் செல்லும் ஆசிரியரை போக விடாமல் தடுத்து கண்ணீர் விட்ட மாணவர்கள்.! நெகிழ்ச்சியான சம்பவம்

0

வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் இவர் தொடர்ந்து 23 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வந்தார், தற்பொழுது அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது, முதுகலை ஆசிரியராக பணியாற்ற இருக்கிறார்.

தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதலில் செல்ல இருக்கிறார் இதனை அடுத்து ஆசிரியர் செந்தில்குமாருக்கு அங்கு உள்ள சக ஆசிரியர்கள் விழா ஏற்பாடு செய்தார்கள், அப்பொழுது மாணவ மாணவியர் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு சார் போகாதீங்க சார் போகாதீங்க எங்கள விட்டுட்டு போகாதீங்க என கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

இதைப்பார்த்த ஆசிரியர்களும் கண்கலங்கி மாணவர்களை பிரிய மனமின்றி செந்தில்குமார் விடைபெற்றார். பொதுவாக மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என்றால் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் செய்து படிக்க வைப்பார் பாடங்களை புரியும் வகையில் சொல்லிக் கொடுப்பார்.

இதனால் ஆசிரியர் மாணவர்களிடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது சக ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றாலும் அந்த ஆசிரியரின் பாடங்களை சேர்த்து செந்தில்குமார் நடத்துவார் இவ்வாறு அந்த பள்ளி மாணவர்கள் பேசினார்கள்.