தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டும் இயக்குனர் லோகேஷ் – அடுத்த படம் யாருடன் தெரியுமா.? வெளிவந்த தகவல்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறார் இதுவரை அவர் மாநகரம், கைதி, மாஸ்டர் அண்மையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த விக்ரம் என அனைத்து படங்களும் வெற்றிப்படங்கள். குறிப்பாக இந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக விக்ரம் திரைப்படம் பார்க்கப்படுகிறது இதுவரை மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது விக்ரம் திரைப்படம் இப்படி பல்வேறு சாதனைகளை செய்து அசத்தியுள்ளதால் இயக்குனர் லோகேஷ் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். விக்ரம் படத்தின் வெற்றியால் டாப் நடிகர்கள் இவரிடம் கதை கேட்க ரெடியாக இருகின்றனர் ஒரு சிலர் வாண்டடாகவே வருவதாக கதை கேட்க ரெடியாக இருக்கின்றனர்.

லோகேஷ் அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 படத்தை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு சல்மான் கான் உடன் லோகேஷ் இணைவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது அண்மையில் லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத் சென்று இருந்தார் அப்பொழுது சல்மான் கானையை சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தின் கதையைப் பற்றி பேசி இருக்க அதிக வாய்ப்புகள் இருக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. ஆனால் இது பற்றி உறுதியான தகவல் வெளிவரவில்லை ஆனால் இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment