கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்றுசரக்கு வாங்கிய இளம்பெண்கள்.! புகைப்படத்தை பார்த்து பொங்கி எழுந்த சர்ச்சை இயக்குனர்.!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவை மே 17-ஆம் தேதி வரை நீடித்துள்ளார்கள் இதனால் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கூலித் தொழிலாளர்கள் ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இப்படியிருக்க நீண்ட வரிசையில் நிற்கும் இளம்பெண்களின் புகைப்படம் இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்தில் ஏதோ மல்லிகை கடை அல்லது காய்கறி கடை வாசலில் நிற்பது போல் காத்திருக்கிறார்கள், ஆனால் இந்த கூட்டம் சரக்கு வாங்குவதற்காக மதுக்கடை முன்பு மணிக்கணக்கில் மொட்டை வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நிபந்தனைகளுடன் மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன, ஏதோ பத்து நாள் பட்டினி கிடந்தவன் விருந்திற்கு காத்திருப்பது போல் சரக்கு கடையில் இளம்பெண்கள் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் சில இடங்களில் அடிதடி நடத்தி கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதி உள்ளது.

மதுக்கடையில் நீண்ட வரிசையில் இளம்பெண்களும் வெயிலில் இருந்து சரக்கு வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இயக்குனர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.  யார் ஒயின்ஷாப் கியூவில் இருக்கிறார்கள் என்று பாருங்கள் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காக்க வேண்டும் என்று இப்பொழுதும் பேசி வருகிறோம் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment