குடிமகன்களுக்கு இனி மகிழ்ச்சிதான்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம்

0
tasmac
tasmac

ஆர் கிர்லோஷ்குமார் தான் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆவார், இவர் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், இந்த சுற்றறிக்கையில் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு தான் அவர் அந்த சுற்றறிக்கையில் கூறியதாவது, டாஸ்மாக் நிறுவனத்திற்கு பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன, முக்கியமாக அந்த மனுவில் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்று கோரிக்கை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகமான கோரிக்கை என்றால் கடை மற்றும் பணியாளர்கள் இடம் மாற்றுதல், பணியமர்த்தல் ,காப்பு தொகை திரும்ப பெறுதல், பணப்பயன்கள் மதுபானங்களும் கூடுதல் விலை, குறித்த நேரத்தில் கடையை செயல்படுத்துவது, என பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது, இப்படி அடிக்கடி மனு குவிந்து வருவதால் பணிகளில் இடையூறு ஏற்படுகிறது அதே போல் மனுதாரர்கள்  பலர் நீதிமன்றத்தையும் நாடுகிறார்கள் இதனால் அதிக வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த கோரிக்கைகளை கண்டறிய ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் செவ்வாய்க்கிழமைகளில் அதாவது விடுமுறையாக இருந்தால் அடுத்த நாள் காலை ஒன்பதரை மணி முதல் 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், பணியாளர்கள், தின்பண்ட விற்பனையாளர்கள் பார் உரிமையாளர்கள் என அனைவரும் தங்களது புகார்களை கூறலாம் மேலும் இந்த குறை தீர்ப்பு கூட்டம் குறித்து அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் அனைத்து பணியாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

ஒரு மனு மனுதாரர் மனு கொடுக்கிறார் என்றால் அதை 15 நாட்களுக்குள் மனுவின் மீதான நடவடிக்கையை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும், அப்படி அந்த மனு தாமதம் ஆனால் அதையும் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் பல டாஸ்மாக் கடைகளில் அதிகமாக வசூலிப்பதும், தண்ணீர் பாடலுக்கு அதிகமாக வசூலிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது இதனை எதிர்த்து கேட்டாலும் அப்படித்தான் என்பார்கள். ஆனால் இனி புகார் மூலம் கூற முடியும் என்பதால் குடிமகன் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.