தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகள் செய்த முகம் சுழிக்கும் செயல்.! கருமம் கருமம் இங்கேயுமா பக்தர்கள் ஆவேசம்

0
172

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது, இந்த கோவில் கட்டி முடிவடைந்து ஆயிரம் வருடங்கள் நிறைவடைந்துவிட்டது, இந்த கோவிலுக்கு தமிழ் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதேபோல் பக்தர்கள் பயணிகள் அனைவரும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள் என்றால் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இந்த கோவிலில் பெரியநாயகி, பெருவுடையார், விநாயகர், வராகி அம்மன், முருகர், தட்சணாமூர்த்தி, கருவூரார், நடராஜர், ஆகியோர்களின் சன்னதிகள் இங்கே இருக்கின்றன.

அதேபோல் இந்த கோவிலை சுற்றி திருச்சுற்று மண்டபங்கள் இருக்கின்றன, தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது அதனால் இந்த திருச்சுற்று மண்டபங்கள் சமீபத்தில் சீறி அமைக்கப்பட்டன, மேலும் விமான கோபுரம் மற்றும் மற்ற கோபுரங்கள் அனைத்தும் தரைதளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் இந்த கோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா உள்ளது, இந்தப் பூங்கா காதலர்களின் வீடாக இருந்துவந்தது தஞ்சாவூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பூங்காவையும் சீரமைக்கும் பணிகளில் மூடப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகள் கோவில் வளாகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள் காலை 9 மணிக்கு தொடங்கி கோவில் நடை சாற்றும் வரை காதல் ஜோடிகளின் வருகை அதிகமாக உள்ளது, இங்கு வரும் காதல் ஜோடிகள் சாமி தரிசனம் செய்கிறார்களோ இல்லையோ கோவில் தெற்கு, மேற்கு கிழக்கு, வடக்கு என திருச்சுற்று மண்டபங்களை ஆக்கிரமித்து கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்காங்கே இருக்கும் தூண்களில் மறைவிடங்களில் உட்கார்ந்து கொண்டு எல்லை மீறிய செயலில் ஈடுபடுகிறார்கள், இது அங்கு வரும் பக்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சுற்று மண்டபங்களில் குலதெய்வங்களை மற்றும் லிங்கங்களை தரிசனம் செய்வதற்காக சுற்றி வருகிறார்கள்.

அவ்வாறு மண்டபத்தை சுற்றி வரும்போது காதல் ஜோடிகள் சிலர் எல்லை மீறல் ஈடுபடுகிறார்கள், அப்பொழுது அவர்கள் செய்யும் இச்செயல் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது, அதேபோல் சிறுமிகளை அழைத்து வரும்பொழுது அவர்களை கண்ணை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த காதல் ஜோடிகளும் இதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை, தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் அதிகாரிகளும் ரோந்து சுற்றி வருகிறார்கள், ஆனால் அவர்களை பார்த்தாலும் அந்த காதல் ஜோடிகள் கண்டுகொள்வதில்லை,

சிலர் எல்லைமீறும் காதல் ஜோடிகளை அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள் சில காதல் ஜோடிகள் தனித்தனியாக வந்து கோவிலுக்கு உள்ளே சென்றதும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள், இருப்பினும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.