போச்சா!! இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை போட்ட தமிழக அரசு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

0
kadambur-raju-irandam-kuththu
kadambur-raju-irandam-kuththu

Irandam kuthu movie banned tamilnadu government. தமிழ் சினிமா வரலாற்றில் ஆபாசம் இல்லாமல் நல்ல படங்கள் வருவதுண்டு. ஆனால் தற்பொழுது வரும் படங்களில் ஆபாச காட்சிகளே  அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படம் வெளியான போது பெரிதாக எந்த தடையும்  விதிக்கவில்லை.

அதனை தொடர்ந்து  அதற்குப் பின் எடுக்கப்பட்ட பல படங்களை ஆபாசமாகவே  எடுத்துள்ளனர். எனவே இதனால் பெண்கள் பல குற்றங்களை தமிழ் சினிமா மேல் வைத்துள்ளனர். இதற்கு மத்தியில் தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் குத்து’ என்ற படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘இரண்டாம் பாகமாக உள்ளது. இந்தப் படத்தை சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தை 18 வயதை கடந்தவர் மட்டுமே பார்க்க வேண்டும் என்று விதிமுறை விட்டாலும், குடும்பங்கள் மத்தியில் இந்த படம் மிகவும் மோசமான முறையில் உள்ளதால் தற்போது பல பிரபலங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தின் டிரைலரை பார்த்து மிகவும் கேவலமாக உள்ளதாகவும், இது மனதிற்கு வேதனை அளிக்கிறது என்றும் கூறி அந்த படத்தின் இயக்குனர் மேல்  கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே இவருக்கு ஆதரவாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று அவரும் ஆதரவளித்தார்.

எனவே இந்த படம்  பெரும் பிரச்சனைகளை சந்தித்து மத்திய அரசு வரை சென்றுள்ளது. இந்த படத்தின் ஆபாச காட்சிகளை சென்சார் மூலம் நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.