தமிழகத்தில் 144 உத்தரவு.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்ட நடவடிக்கையாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டது அதன்பிறகு பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக பல மாநிலங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்கள், அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 24-3- 2020 மாலை 6 மணி முதல் 144 தடை தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது இந்த நிலை வருகின்ற மார்ச் 31ஆம் தேதிவரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்த உத்தரவை தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Leave a Comment