தமிழகத்தில் 2020-ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எத்தனை நாள் லீவு தெரியுமா.? அரசு ஊழியர்கள் மாணவர்கள் கொண்டாட்டம்

0
pongal leave
pongal leave

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பண்டிகை நாட்களில் மிகவும் பிரபலமானது தீபாவளி மற்றும் பொங்கல், தீபாவளி பண்டிகை காட்டிலும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமாக கொண்டாடுவார்கள். பொங்கல் கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை ஆகும்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு மட்டும் சுமார் ஒன்பது நாட்கள் வரை அரசு விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, 2020 இல் ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களாகும், இதனை தொடர்ந்து 13ம் தேதி திங்கள்கிழமை வேலை நாள்.

அடுத்ததாக 14ம் தேதி செவ்வாய்க்கிழமை போகி பண்டிகையாகும், 15ஆம் தேதி புதன்கிழமை பொங்கல் அதேபோல் 16ஆம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவர் நாள் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் தினம் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் தான்.

அதன் பிறகு 18 ஆம் தேதியும் சனிக்கிழமை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்த இரண்டு விடுமுறை நாட்கள் ஆகும். இதனால் தொடர்ந்து 9 நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, இடையில் வேலை நாட்களாக இருக்கும் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் மொத்தம் ஒன்பது நாட்கள் பொங்கலை கொண்டாடி மகிழலாம்.

13ம் தேதி மற்றும் விடுமுறை தினமாக முதல்வர் அறிவித்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் கடந்த பொங்கலுக்கு தமிழக முதல்வர் ஆறு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

pongal
pongal