தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சகட்ட அதிர்ச்சி.! ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா இதோ முழு விவரம்.!

0

உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்பொழுது இந்தியாவையும் மிரட்டி வருகிறது, நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது, அதிலும் தமிழ்நாட்டில் சென்னையில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே போகிறது அதனால் சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையாக முயற்சி செய்து வருகிறது இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் 2396 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள், இதில் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19-Update
COVID-19-Update

இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது அதேபோல் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 38 பேர் அதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.

இப்படி தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும், முக கவசம் அணிந்து கொண்டு வெளியே செல்வதையும் கட்டாய படுத்தி கொள்ளுங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

COVID-19-Update
COVID-19-Update