கொரோனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது தெரியுமா.?

Chief Minister’s Relief Fund has received to prevent Corona : உலக நாடுகளையே நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, கொரோனாவை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள், தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் இதுவரை தமிழகத்தில் 2168 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள், அதேபோல் 27 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் தினக்கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள், அதனால் பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனாவை தடுப்பதற்காக பொது மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டார் அதன்படி நாள்தோறும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிவாரணநிதி தொகை வந்து கொண்டிருக்கின்றன, கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி சேர்ந்துள்ளது.

இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version