தமிழில் காமெடி கலந்த திகில் திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்.!

தமிழ்சினிமாவில் பல கோணங்களில் பல வகைகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன பேய் படம் என்றால் மக்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்திய நிலையில் அதை மாற்றும் விதமாக காமெடி கலந்த பேய் படத்தை வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் அவற்றை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. யாமிருக்க பயமேன் 2014ஆம் ஆண்டு வெளிவந்தது. காமெடி மற்றும் திகில் நிறைந்த பேய் படமாக எடுக்கப்பட்ட படம் இது. திகிலான பேய் படத்தில் முதல் அனுபவமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் கிருஷ்ணா.

இப்படம் அனைத்து கண்ணோட்ட ரசிகர்களையும் கவர்ந்த படமாக இப்படம் அமைந்தது அதுமட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மற்றும் வெற்றி படமாக மாறியது. இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நகைச்சுவை கலந்த திகிலான இப்படம் பார்ப்பவரை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது.

2. 2015 ம் ஆண்டு வெளிவந்த காமெடி மற்றும் திகில் நிறைந்த படம் டார்லிங். இப்படத்தில் இசையமைப்பாளர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே இப்படத்தில் அவர் நன்றாக நடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவர் இப்படி நடிப்பாரா என்ற அளவிற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் ஜீவி பிரகாஷ். இப்படத்தின் கதை தனது வாழ்க்கையை வெறுத்த நால்வர் தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு வீட்டில் தங்குகிறார்கள் அங்கு பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள் இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை. குடும்பங்கள் கண்டு ரசிக்கும் காமெடி மற்றும் த்ரில்லர் வகையில் திரைக்கதை அமைத்து வெற்றி கண்டுள்ளனர்.

3. காமெடியனாக பட்டையை பிறகு வந்த சந்தானத்திற்கு முதல் பேய் படமாக அமைந்தது தில்லுக்கு துட்டு படம். இப்படத்தின் கதை ஹீரோ மட்டும் ஹீரோயின் இருவரும் காதலிக்கின்றனர் இதனை அறிந்த அவரது அப்பா இருவருக்கும் கல்யாணம் பண்ணி தருவதாக கூறி கொலை பண்ண திட்டமிடுகிறார். ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவில் சந்தானத்தை கொலை பண்ண திட்டமிடுகிறார்கள்.

மொட்டை ராஜேந்திரன் காமெடி மற்றும் பேய் அவ்வபொழுது மிரட்டும் காட்சிகள் நம்மை பதற வைக்கின்றன இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் சந்தானம் அவர்கள்பேய் இடம் பஞ்சு பேசுவது காமெடி செய்வது போன்றவை இடம்பெற்றுள்ளது. இப்படம்  முழுக்க காமெடி கலந்த திரில்லர் படமாக அமைந்தது இப்படம்  குடும்பங்கள் பார்க்க வகையில் அமைந்திருந்தது.

4. ஜாக்சன் துரை 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இறந்துபோன விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு பங்களாவில் அடைத்து உள்ளார்கள் அவர்கள் ஆவியாக வந்து வெள்ளைக்காரனிடம் இருந்துவிடுதலை பெற்றார்களா என்பதே படத்தின் கதை படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரில்லர் படமாக அமைந்துள்ளது

5. ஆதி அவர் நடிப்பில் வெளிவந்த படம் மரகத நாணயம் படம் காமெடி கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை ஒரு மரகதநாணயத்தை தேடி ஒரு குழு அலைகிறது இந்தநிலையில் குழுவிற்க்கு மரகத நாணயம் கிடைத்த பின்பு மிகப்பெரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதை.

6. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் டப்பிங் மீனிங் அதிகமாக இருந்தாலும் காமெடி மற்றும் பேய்களின் காட்சிகள் சிரிப்புக்கு உண்டாக்குகின்றன. இப்படத்தில் கவர்ச்சி, காமெடி, பேய் போன்ற காட்சிகள் தொடர்ந்து இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமலேயே சுவாரஸ்யமாக இழுத்துச் சென்றது இப்படம். இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன

7. 2007ஆம் ஆண்டு   வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் முனி வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ராஜ்கிரன் ஆகியோரின் நடிப்பு போற்றும்வகையில் இருந்தது. இப்படத்தின் கதை பேய் என்றாலே பயப்படும் ஒரு இளைஞனின் உடம்பில் பேய் புகுந்த விடுகிறது. இந்த இளைஞன்  காமெடி, பேய் என மாறி மாறி நடித்து நம்மை பதட்டத்திற்கு உள்ளாகி  உட்கார வைக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ் .

8. ஒரு குடும்பத்தார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தை பழி வாங்கும் படலத்தை நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்து விறுவிறுப்பாக கொண்டுள்ள படம் அரண்மனை இப்படம் முழுக்க முழுக்க விருவிருப்பு பஞ்சமில்லாமல் திரைக்கதையை நகர்த்தி உள்ளனர். படத்தில் சந்தானம், கோவைசரலா இவர்களுடன் காமெடி மிக நேர்த்தியாக நடித்துள்ளனர்.

சில படங்கள் காமெடி மற்றும் த்ரில்லர் கதைகளை கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் பின்வருமாறு காஞ்சனா 2 மற்றும் தேவி போன்ற படங்கள் ஆகும்.

Leave a Comment